கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளதோடு சுகாதார  வழிமுறைகளுக்கு அமைவாக அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, 200 இற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டுள்ள பாடசாலைகளில் சுகாதார நடைமுறைக்கு அமைய சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு முடியுமாயின் அந்தப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தகைய பாடசாலைகளில் போதுமான அளவிலான வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் இருப்பார்களானால் மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக்கொடுக்கும் வகையில் அத்தகைய பாடசாலைகளில்  அனைத்து தர மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அனுமதிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் அனைத்து பாடசாலைகளையும் திறப்பது தொடர்பில்  மாகாண தலைமைச் செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், வலையக் கல்விப் பணிப்பாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் மற்றும் அதிபர்களுக்கு  தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: