போராட்டத்தைக் கைவிட துறைமுக ஊழியர்களின் கோரிக்கை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய செயற்பாடுகளை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருவதாக எழுத்து மூலம் அறிவித்தால் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக துறைமுக ஊழியர்கள் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கிழக்கு முனைய அபிவிருத்திப் பணிகளை விரைவில் ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி துறைமுக ஊழியர்கள்  போராட்டத்தை ஆரம்பித்துள்ளதன் காரணமாக கொழும்பு துறைமுகப் பணிகள் அனைத்தும் முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கிழக்கு முனைய செயற்பாடுகளை வெகு விரைவில் துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வர வேண்டும் என 23 தொழிற்சங்கங்கள் கோரியுள்ளதோடு அந்தக் கோரிக்கையை பொதுத் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றுமாறும் அவர்கள் கோரியுள்ளாக தெரியவந்துள்ளது.

தமது  போராட்டத்தைக் கைவிட எழுத்து மூலம் ஆவணப்படுத்தாவிடின் தொடர்ந்தும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுப்பதாக கொழும்பு துறைமுகத்தின் சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது போராட்டம் தொடருமானால் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: