பாடசாலைகளில் தரம் 6 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்களை கட்டாயமாக்கத் தீர்மானம்


நாட்டில் காணப்படும் அனைத்து பாடசாலைகளிலும்  6ம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்களை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இதன் ஊடாக கல்வியைப் பெறும் போதே தொழிற்துறைக்கான பயிற்சியில் ஈடுபடுத்த முடியும் எனவும்,பாடசாலைகளில் ஆலோசனை முறையைக் கட்டாயமாக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களிடையே காணப்படக்கூடிய உளநல மற்றும் சமூக சிக்கல்களுக்கு இதனுாடாக தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனிடையே தரம் 9 இல் சித்தி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வியைப பூர்த்தி செய்வதற்கான சான்றிதழை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு மற்றும் தொலைதுாரக்கல்வி தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி உபாலி சேதர குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

No comments: