ஹெரோயின் 530 மில்லிகிராம்,கேரளா கஞ்சா 430 மில்லிகிராம் ஆகிய போதை பொருட்களுடன் மூவர் கைது.

 பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் 

நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி பல்லேகம கல்குவாரி பிரதேசத்தில் 530மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 430மில்லிகிராம் கேரளா கஞ்சா  போன்ற போதை பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் நாவலபிட்டி குற்றதடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் 15.08.2020 சனிக்கிழமை மாலை வேளையில் இடம்பெற்றதாக நாவலபிட்டி குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

நாவலபிட்டி குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சா போதைபொருட்ளுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்பட்டதோடு இந்த மூன்று சந்தேக நபர்களும் விற்பனைக்காக தம்வசம் இந்த போதை பொருளை வைத்திருந்ததாகவும்  குற்றத் தடுப்பு பிரிவினரின் ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

கைது செய்யபட்ட சந்தேநபர்கள் 25 தொடக்கம் 30 வயதினை  கொண்டவர்கள் எனவும் சந்தேக நபர்கள் மூன்று பேரையும் நாவலபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாகவும்பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments: