மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க துறவி அருட்தந்தை ஹேபர்ட் அடிகளின் 30 வருட நினைவுங்சலியும் சிலை திறப்பும்

 கனகராசா சரவணன்

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் கூடை பந்தாட்ட பயிற்றுவிப்பாளாக பணியாற்றிய அமெரிக்க துறவி அருட்தந்தை ஹேபர்ட் அடிகள் 1990 ம் ஆண்டு ஏறாவூர் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டு இன்று 30 ஆண்டுகள் நினைவு அஞ்சலியும் அவரின் நினைவுச் சிலை திறப்பும் புனித மைக்கல் கல்லூரி வளாகத்தில் நேற்று சனிக்கிழமை (15)  இடம்பெற்றது. 

இந்த 30 ஆண்டு நினைவஞ்சலி சிலை திறப்பு மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் மைக்கல் மென் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அருட்தந்தை நவாஜி என்றழைக்கப்படும்  நவரத்தினம்  தலைமையில் இடம்பெற்றது. 

இதில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை கலந்து கொண்டு புனித மைக்கல் கல்லூரியின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட அமெரிக்க துறவி அருட்தந்தை ஹேபர்ட் அடிகளின் திரு உருவச் சிலையை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். 

அருட்தந்தை அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஜெனிங்ஸ் நகரில் 13.10.1923 ஆண்டு பிறந்த அவர் 17 வயதில் கத்தோலிக்க குருவாக வேண்டும். என்ற நோக்கில் இயேசு சபையில் இணைந்து கொண்டார்.  இயேசு சபையோயில் தனது ஆரம்பக் கற்கையினை பூர்த்தி செய்து கொண்ட பிறகு ஒரு துறவி மாணவனாக இலங்கைக்கான மறைபரப்பு பணியில் இணைந்து

பணியாற்ற 1948 ஆம் ஆண்டு இலங்கை திருகோணமலை மறை மாவட்ட இயேசுசபை குழுவினருடன் இணைந்து கொண்டார். இதனை தொடர்ந்து திருகோணமலை மட்டக்களப்பு பகுதிகளில் பணியாற்றி பின் இந்தியா சென்று புனே குருமடத்தில் கற்கையினை நிறைவு செய்து 24.03.1954 ஆம் ஆண்டு குருவாக திருநிலப்படுத்தப்பட்டார் . 

அருட்தந்தை 1954 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை திருகோணமலைக்கு வருகை தந்து புனித சூசையப்பர் கல்லூரியில் ஆசிரியராகவும் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளராகவும் விஞ்ஞான பட்டதாரஆசிரியராக கடமையாற்றிய போது புனித சூசையப்பர் கல்லூரி அரசுதான் பொறுப்பேற்க பிற்பாடு 1970 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி இயேசு சபை குடும்பத்தில் இணைந்து கொண்டார்.

அதன் பின் புனித மிக்கேல் கல்லூரியில் கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக தனது பணியினை ஆரம்பித்தார். இவ்வாறான நிலையில் 1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையான காலப்பகுதியில் வாழைச்சேனை பகுதியில் இராணுவ முற்றுகையிடப்பட்டிருந்த மக்கள் , குருவானவர், அருட்சகோதரிகள் போன்றோரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றும்  வகையில் அங்கு விரைந்து செயற்பட்டார். 

பின்னர் அங்கு தனது பணியினை முடித்து அவர்களை மட்டக்களப்பிற்கு பாதுகாப்பாக அனுப்பிவிட்டு தனது மோட்டார் சைக்களில் 15.08.1990 ஆம் ஆண்டு  வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்துக்கொண்டு இருந்த போது ஏறாவூர் பகுதியில் வைத்து அருட்தந்தையும் அவருடன் சென்ற தொழில்நுட்ப கல்லூரி மாணவன் ஆகிய இருவரும் காணாமல் ஆக்கப்பட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டு 15.08.2020 இன்றைய தினம் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அருட்தந்தை ஹேபியர் கிழக்கு வாழ் மக்களுக்கு அருட்தந்தை ஆற்றிய மறைப்பணி ,அறப்பணி ,கல்விப்பணி .விளையாட்டு பணி போன்றவற்றின் நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மைக்கல்மென் விளையாட்டுக் கழகத்தினால் புனித மிக்கேல் கல்லூரி வளாகத்தில் நினைவு சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தினர். 

இதில் அருட்தந்தையர்கள் , மைக்கல் மென் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் , புனித மைக்கல் கல்லூரி பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 



No comments: