திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் 25 குழுக்கள்


மேல் மாகாணத்தில் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் 25 குழுக்கள் செயற்படுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபர் தேபந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறைச்சாலைகளில் உள்ள திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினர்களால் தொடர்ந்தும் குற்றச் செயல்கள் வழிநடத்தப்படுவதால் குற்றங்களை ஒடுக்குவதில் சிக்கல் ஏற்படுவதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.


No comments: