20 ம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதிவழங்கி வைப்பு

 க.சரவணன் 

எதிர்வரும் 20 ம்திகதி 2020 புதிய நாடாளுமன்ற அமர்வில் தடுப்பு காவலில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொள்வதற்கான அனுமதியை  மட்டக்களப்பு குற்றவியல் சிவில்  மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் அனுமதியை செவ்வாய்க்கிழமை இன்று (18)  வழங்கியுள்ளார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நடந்து முடிந்த பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

இந்த நிலையில் எதிர்வரும் 20 ம் திகதி இடம்பெறவுள்ள புதிய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதி கோரியிருந்தனர். இது தொடர்பான இன்று செவ்வாய்க்கிழமை (18) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில்  குற்றவியல் சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் எடுக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற கன்னி அமர்வில் கலந்துகொள்வதற்கு நீதிபதி அனுமதியளித்துள்ளார். 

இதேவேளை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துவரப்பட்டதுடன் கட்சி ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு முன்னாள் கூடி நின்றமை குறிப்பிடத்தக்கது 

No comments: