19வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பிலான கலந்துரையாடல்


19வது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19வது திருத்தை கொண்டு வந்த முன்னால்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் ஏ.எம்.சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் 19வது திருத்தத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல முடியாது என்ற எண்ணப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

19வது திருத்தை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே அவர்களும் உள்ளனர்.

இதற்கமையவே தாங்கள் மக்களிடம் ஆணை கோரியிருந்ததாகவும்,அதற்காக மக்கள் தமது தரப்பினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே அது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானிக்கப்படும்.19வது திருத்தம் கொண்டுவரப்பட்ட விதம் தொடர்பிலும்,அதில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றமை தொடர்பிலும் மக்கள் புரிந்துக் கொண்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: