இலங்கையிலிருந்து இந்தியா சென்ற 174 இந்தியர்கள்

இலங்கை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த 174 இந்தியர்கள் இந்திய விமான சேவைக்குத் சொந்தமான விசேட விமானமொன்றில் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடில்லி நோக்கி புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த விமானத்தில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங்கையர்கள் நாடு  திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன் பல சந்தர்ப்பங்களில் இலங்கையில் பணி புரிந்து வந்த பல இந்தியர்கள் இந்திய விமான சேவையின் விசேட விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு மீண்டும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: