சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது.

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டப் பகுதியில் உள்ள தேயிலை மலையில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களும், பொகவந்தலாவ லொய்னோன் தோட்டத்தில் இருந்து ஊற்றெடுத்து செல்லும் ஆறு ஒன்றில் மாணிக்கககல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் உள்ளடங்கலாக ஏழு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் கொட்டியாகலை பகுதியில் நான்கு சந்தேக நபர் நேற்றைய தினமும் பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப் பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் இன்று விடியற்காலை கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இதேவேளை சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட ஏழுபேருக்கு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு எதிர்வரும் செவ்வாய் கிழமை ஹட்டன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments: