பாவனையாளர்களு நீர் விநியோகத்தை துண்டிக்காதிருக்க தீ்ர்மானம்


நீர் கட்டணத்தை செலுத்தாத பாவனையாளர்களுக்கான நீர் விநியோகத்தை இந்த வருட இறுதி வரை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

வீட்டு நீர் பாவனையாளர்களுக்கு மாத்திரமே இந்த சலுகை வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் R.S.ருவீன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான நீர் கட்டணம் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

மாதாந்தம் 25 அலகுகளுக்கு குறைவாகப் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு தற்போது 10 வீத சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் R.S.ருவீன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: