இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நடைப்பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பில் இன்று முதல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவ்வாறு நிறுத்தப்படுகின்ற வாகனங்களை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கான செலவினை வாகன  உரிமையாளர்களே செலுத்த வேண்டும் என்பதுடன் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நடைபாதைகள் மற்றும் வாகனம் நிறுத்த தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments: