வாகன சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கும் பணி இலங்கை இராணுவத்திடம்

அடுத்த வருடம் தொடக்கம் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணி இலங்கை இராணுவத்திடம் வழங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

வருடாந்தம் பெரும் தொகைப் பணத்தை செலுத்தி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகையான பணம் வெளிநாட்டைச் சென்றடைகின்றது.

அதனால் இந்த விடயங்களை கவனத்திற் கொண்டு எதிர்காலத்தில் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் பணியை இராணுவத்திடம் ஒப்படைப்பது தொடர்பில் நேற்றைய தினம் விசேட  பேச்சுவார்த்தை ஒன்று போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

No comments: