வாகன விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

யக்கல-கிரிந்திவெல வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன  விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயமடைந்த நிலையில் அவர்களது இரண்டு மகள்களும் கம்பஹா வைத்தியசாலையிலும், வாகன  சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன சாரதி குடிபோதையில் வாகனத்தைச் செலுத்தியுள்ள நிலையில் காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதால் மின் கம்பம் ஒன்றின் மேல் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபத்து தொடர்பில் யக்கல பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments: