கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் -ஞனசார தேரர்


(குமணன் சந்திரன்)

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை இவ்வாட்சியில் இம்முறை பெற்றுத்தருவதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதிக்கு தனிப்பட்ட விடயமாக புதன்கிழமை (15) இரவு சென்றிருந்தார்.

இந்நிலையில் அங்கு சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி தருமாறு உண்ணாவிரதம் இருந்தவருமான சந்திரசேகரம் ராஜன் இடைநடுவில் மறித்து கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் கடந்த கால வாக்குறுதி என்னவானது என கேள்வி எழுப்பிய வேளை மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு மாநகர சபை உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை இவ்வாட்சியில் தரம் உயர்த்தி தருவதாகவும் எனவே அவசரப்படாமல் எதிர்பார்த்து காத்திருக்குமாறு அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றார்.

மேலும் பெரிய நீலாவணை வீட்டுத் திட்டத்தில் ஒரு சிங்கள தாயாருக்கு ஏற்பட்ட சுகவீனத்தை அடுத்து நலன் விசாரிப்பதற்காக இப்பகுதிக்கு வருகை தந்துள்ளதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட ஞானசார தேரருடன் வந்திருந்தவர்கள் குறிப்பிட்டனர்

No comments: