பொது சுகாதார பரிசோதகர் சங்கப் போராட்டம்

கொரோனா தொற்றுக்  கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க உறுப்பினர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

தங்களது சட்ட சிக்கல் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்காததன் காரணமாக இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் இத்தொழிற்சங்கப் போராட்டம் ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: