தேர்தல் சட்டங்களை மீறியவர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறும் நடவடிக்கைகள் தொடர்பாக சுற்றிவளைப்புகளில் ஈடுபடுத்தப்படவுள்ள  பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்  பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை தேர்தல் சட்டங்களை மீறிய 257 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 6 வேட்பாளர்களும்  கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.  

No comments: