வென்றாலும்,தோற்றாலும் வேறு கட்சிகளுடன் இனி அரசியலில் ஈடுபடமாட்டேன்

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க இன்று நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில்  இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் “வென்றாலும் தோற்றாலும் வேறு கட்சிகளுடன் இனி அரசியலில் ஈடுபடமாட்டேன் ”,செத்தாலும் ஐ.தே.க உறுப்பினராகவே சாவேன்.நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐ.தே.க ஆதரவாளர்களைப் பாதுகாப்பேன் என்று பல கருத்துரைகளை முன்வைத்தார்.

மேலும் ஐ.தே.கட்சியாக தனித்துப் போட்டியிடுவதில் ஆரம்பத்தில் சிறு பயம் இருந்தது ஆனால் கூட்டங்களை நடாத்தும் போது மக்களின் பேராதரவுக் கிடைத்தது.எனவே வெற்றிகரமாக பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது.நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் நாம் நிச்சயம் 2 ஆசனங்கைளைக் கைப்பற்றுவோம்.ஆட்சியைப் பிடிப்பதே எமது இலக்கு என்றார்.

கடந்த நான்கரை வருடங்களாக பல திட்டங்களை நாம் முன்னெடுத்தோம்.அவற்றில் சில குறைபாடுகள் இருக்கலாம்.அவற்றை  நிவர்த்தி செய்து நாட்டை முன்நோக்கி அழைத்துச் செல்வதற்காகவே இன்னும் 5 ஆண்டுகளை கோறுகின்றோம்.நான் மக்களை அழிப்பவன் அல்ல,வளர்ப்பவன்.அதனால்தான் இன்றளவிலும் பலர் எனது பின்னால் இருக்கின்றனர்.

ரணிலுடன் இணைந்துதான் பயணிப்பேன் அவருக்கு பிறகு ஜனநாயக முறைப்படி தலைமைத்துவப் பதவியை ஏற்பதே எனது விருப்பம் என்று உரையாற்றியதாக தெரியவந்துள்ளது. 

No comments: