எனது மக்களுக்காவே நீதிமன்றம் சென்றேன் - சம்மந்தன்


(ஏ.ஆர்.எம்.றிபாஸ்)

1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றம் செல்வதில்லை என்று நினைத்தேன் ஆனால் சம்பூர் மக்களுக்காக நீதிமன்றம் சென்றேன் என இரா சம்பந்தன் தெரிவித்தார்

நேற்று (13) சம்பூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்

சம்பூர் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக வழக்குக பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு சென்றேன் நீதிமன்றம் எங்கள் சார்பாக தீர்ப்பளித்தது அரசாங்கம் பழைய வர்த்தமானியை ரத்து புதிய வர்த்தமானியின் பிரகாரம் குடியிருந்த மக்களுக்கு அந்தக் காணியை வழங்கியிருக்கின்றது

நீங்கள் இங்கு நிரந்தரமாக வாழவேண்டும் சுபிட்சமாக வாழவேண்டும் சம்பூர் அபிவிருத்தி அடைய வேண்டும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகின்றோம் அனேகமாக இந்த வாரத்தில் வெளியாகும் அதில் கிராமப்புறங்களில் மக்கள் சார்பாக பார்க்க வேண்டிய அபிவிருத்தி பணி சம்பந்தமாக கூறியிருக்கின்றோம்

மக்களின் தொழில் வாய்ப்பு, இளைஞர்கள், பெண்கள், விவசாயம், நீர்ப்பாசனம், வெளிநாட்டு முதலீடு, கைத்தொழில், இது தொடர்பான பல விடயங்கள் மக்களுடைய வாழ்க்கை உயர்த்துவதற்கு உள்ளடக்கப்பட்ட இருக்கின்றது

30 வருட காலமாக பலவிதமான துன்பங்களை துயரங்களை இழப்புகளை அழிவுகளை எதிர்நோக்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அரசியல்ரீதியாக அரசியல் தீர்வைக் காண்பதற்காக முயற்சிக்கும் அதேவேளை அந்தக் கருமத்தை கையாளக் கூடிய வகையில் பல யோசனைகளை முன்வைத்து இருக்கின்றோம்

பாராளுமன்றத்துக்கு ஒரு பலமான அணியைத் தேர்வு செய்யப்பட்டால் அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவது எமது நோக்கம்.

அரசியல் தீர்வு சம்பந்தமாக இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறோம் சாதாரணமாக அரசியல் தீர்வு உரிய நேரத்தில் பெறாவிட்டால் அதைப் பெறுவதில் பலவிதமான தாமதங்கள் ஏற்படலாம் எங்களுடைய முயற்சியை பொறுத்தவரையில் நாங்கள் நிரந்தரமான தீர்வு முன்னைய காலத்தில் கண்டிருக்க வேண்டும் ஆனால் அது நடைபெறவில்லை

இருந்த போதிலும் கூட 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் தமிழ்மக்கள் தாக்கப்பட்டபோது அம்மையார் இந்திரா காந்தி நல்லெண்ண முயற்சியை வழங்குவதற்கு முன் வந்தார் அதனையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் நல்லெண்ண முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டது துரதிஷ்டவசமாக அன்னை இந்திராகாந்தி 84 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்

இருந்தபோதிலும் இந்தியாவுடைய முதல்வர் ரஜிவ் காந்தி அவர்கள் இந்த காரியத்தில் விடாப்பிடியாக இருந்தார் தமிழ் மக்களை கைவிடமாட்டேன் எமது அம்மையாரின் பணியை தொடர்வேன் உறுதி என எனக்கு பல தடவை சொல்லியிருக்கின்றார் அவருடைய முயற்சி தொடர்ந்தது. 

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது மாகாண சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் தீர்மானம் எடுக்கப்பட்டது இணைந்த வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது வடகிழக்கு மாகாணசபைக்கு அமைச்சர்கள் முதலமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டது துரதிஸ்டவசமாக அதுவும் குழம்பியது

அந்த முயற்சி முன்னேற்றகரமான முயற்சி அதனை நாங்கள் உதாசீனம் செய்ய விரும்பவில்லை கணிசமான அளவுக்கு அரசியல் ரீதியான அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக உள்ளடக்கப்பட்ட அது முழுமையான முன்னேற்றம் அடைய வேண்டும் 

அதில் திருத்தங்கள் ஏற்பட வேண்டும் என்று நீண்ட காலமாக ஜனாதிபதி ராஜபக்ச அவர்களின் காலத்தில் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் காலத்தில் பல முயற்சிகளை செய்து இருக்கின்றோம் பல முன்னேற்றங்களை அரசாங்கத்திடமிருந்து 

சர்வதேச தலைவர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்கின்றோம் இந்திய பிரதமருக்கு பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன சர்வதேசத்துக்கு பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன கூட்டுச் சக்கரம் என்று அழைக்கப்படும் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியத்தை அமெரிக்காவை ஜப்பானை நோர்வேயை உள்ளடக்கிய ஒரு நிறுவனம் அவர்களுக்குப் பலவிதமான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு இந்தியாவுக்கு பல விதமான கொடுக்கப்பட்டிருக்கின்றன 

இவை அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் எல்லா விடயங்களும் இருக்கின்றன கடந்த வருடம் இதனை முடிவுக்குக் கொண்டுவரலாம் என முயற்சித்தோம் ஆனால் இரண்டு பேரும் கட்சிகள் ஒன்றாக கூடி ஆட்சி செய்தும் ஆட்சி கூட அவர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நடைபெறவில்லை. 

இந்தப் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த பிறகு அது முதல் முதல் காரியமாக முன்னெடுக்கப்படும் எங்களிடம் பகுதியில் உள்ளது மறைக்க முடியாத அனைத்தும் பதிவு உள்ளது குழப்ப முயற்சிக்க வந்தவருக்கு அதனை கூறவில்லை முயற்சிப்பார்கள் நாங்கள் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும் 

பாராளுமன்றத்திற்கு பலமாகச் செல்ல வேண்டும் சென்ற வருடம் 16 பேர் பாராளுமன்றத்துக்கு சென்றோம் இம்முறை எனது எதிர்பார்ப்பு 20 பேராவது செல்ல வேண்டும் பாராளுமன்றத்திற்குச் சென்று உறுதியாக நிற்க வேண்டும் மக்களுடைய ஜனநாயகத்தைக் இதுதான் மக்கள் ஒரு நிரந்தரமான நியாயமான கல்வி உச்ச அதிகாரப் பகிர்வு ஒருமித்த நாட்டுக்குள் நாடு பிளவுபடாமல் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு கேட்கின்றார்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் இருக்க வேண்டும்

எனவேதான் நீங்கள் எல்லோரும் வாக்களிக்கவேண்டும் வாக்குகள் வீணாகாமல் எல்லோரையும் வாக்களித்த செய்ய வேண்டும் மற்ற சிறிய கட்சிகளுக்கு வாக்களித்து பிரயோசனமில்லை 

அவர்களால் எதையும் செய்ய முடியாது ஒரு பாராளுமன்ற பிரதிநிதி கூட பெற முடியாது அவர்களுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் வீன் வாக்குகள் செல்லுபடியான வாக்குகள் அவற்றையெல்லாம் உணர்ந்து நீங்கள் ஒற்றுமையாக ஒருமித்து ஒரு அரசியல் தீர்வை காண்பதற்கும் தொடர்ந்து உங்களுடைய மண்ணில் நிரந்தரமாக வாழ்வதற்கும் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சிறந்த வெற்றியை தர வேண்டும் என்று உங்களை அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன் என இரா சம்பந்தன் தெரிவித்தார்

No comments: