நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்ற உற்சவத்தின் நேரலை தொடர்பான அறிவித்தல்


(யாழ் அகத்தியன் நிருபர்)

நடைபெறவுள்ள 2020ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவில் Covid - 19 நோய் பரவலை தடுக்கும் உபாயமாக அதிகளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்து, முருகப்பெருமானின் கொடியேற்ற நிகழ்வினை தூர தரிசனம் செய்யும் பொருட்டு, நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் கொடியேற்ற தினத்தன்று இடம்பெறும் 

முக்கிய நிகழ்வுகளை இலவசமாக ஆலய உத்தியோகபூர்வ “YouTube’’ தளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களும் உபயோகித்து கொள்ள முடியும்.
“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

Youtupe தள முகவரி

https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ/featured

ஒளிபரப்பப்படும் நேரம் - 25/07/2020 இலங்கை நேரம் காலை 9.15 - 10.30 வரை

No comments: