மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கினிகத்தேனை பொல்பிட்டிய  சமனல நீர் மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை 7.30 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சடலம் யாருடையதென  இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.  

No comments: