பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 16 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2333 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2811 ஆக பதிவாகியுள்ளது.

No comments: