துறைமுக ஊழியர்களின் போராட்டம்

கிழக்கு முனையம் தொடர்பில் தெளிவான பதில் ஒன்றை எதிர்பார்த்து கொழும்பு துறைமுகத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக கைத்தொழில் மற்றும் தொழில் முற்போக்கு சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் சாமல் சுமனரத்ன அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கிழக்கு முனையம் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடாக தீர்க்கமான பதில் கிடைக்கும் வரை தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என துறைமுக ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதனுாடாக எதிர்கால சந்ததியினர் பாரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் என துறைமுக ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே இன்று பகல் தொடக்கம் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கான வீதியிலுள்ள பாலத்திற்கருகில் தாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக  தொழிற்சங்க பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments: