தனியார் பேருந்து ஒன்றில் திடீர் தீப்பரவல்

நேற்று இரவு 7.45 மணியளவில் கண்டி தெல்தெனிய பகுதியில் அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸார் மற்றும் கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து தீயினைக் கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இத்தீப்பரவல் காரணமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் இது தொடர்பாக  தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

No comments: