நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் நேற்றை தினம் 6 பேருக்கு கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2730 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுறுதிச் செய்யப்பட்ட 678 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2041 ஆக அதிகரித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.


No comments: