தனியார் துறையினருக்கு செப்டம்பர் மாதம் வரை சம்பளம் வழங்க தீர்மானம்

கொரோனா தொற்றுக் காரணமாக தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அதன்படி சேவை வழங்குனர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் திறன் விருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தனியார் துறையினருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை குறித்த தொகையை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.. 

No comments: