கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை


நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் சில தினங்களுக்கு முன் கட்டம் கட்டமாக மீள திறக்கப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு கல்வி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அதாவது  பாசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் பாடசாலை செல்லும் ஆசிரியர்கள் 1.30 வரை தொடர்ந்தும் பாடசாலையில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மேலதிக வகுப்புக்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் 3.30 மணிவரை கட்டாயம் பாடசாலையில் இருந்தாக வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: