இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை கற்றல் செயற்பாடுகள்

கொரோனா  தொற்றுக் காரணமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய  11,12 மற்றும் 13ம் தர மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஏனைய தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் ஆகஸ்ட் 10ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்  எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தவுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உபஅதிபர்கள் எதிர்வரும் 28ம் திகதி முதல் 31ம் திகதி வரை பாடசாலைகளுக்கு வருகைத் தர வேண்டும் என்பதோடு குறித்த நாட்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: