ரயிலில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யுவதி

கொட்டகலை மற்றும் தலவாக்கலை புகையிரத  நிலையங்களுக்கிடையிலான  சென்கிளேயர் பகுதியில் வைத்து கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் இருந்து பாய்ந்து யுவதி ஒருவர் இன்று  தற்கொலை செய்துக் கொண்டதாக தலவாக்கலை பொலிஸ்ர் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர் தலவாக்கலை  சென்கிளேயர் தோட்டத்தைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: