நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்

நாட்டில நேற்றைய  தினம் 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 கைதிகளும், அங்கு தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பைப் பேணிய தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது..

மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2764 ஆக பதிவாகியுள்ளதோடு,பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2094 ஆக பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றில் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 659 ஆக காணப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது..

No comments: