அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்

இடம்பெறவிருக்கும்  பொதுத் தேர்தலை  முன்னிட்டு எதிர்வரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் நாட்டில் உள்ள  அனைத்து  மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே குறித்த இரண்டு நாட்களும் நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் மூடவுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: