யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்குப் பரீட்சைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என பி.சி.ஆர் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

அதனால் யாழ்ப்பாணப்  பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை மீளத் திறந்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் புதியக் கட்டுப்பாட்டுடன் சுகாதாரத் துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் தங்கியுள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் நாள் வரை வளாகத்தை விட்டு வெளியேற முடியாது என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிலையில் யாழ்ப்பாணப்  பல்கலைக்கழக விவசாயம்,பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் பரீட்சை நடவடிக்கைகள் நாளை வழமைக்குத் திரும்பும் என வளாகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

மேலும் அனைத்து மாணவர்களும் சமூக இடைவெளியைப் பேணுவதோடு முகக்கவசம் அணிந்து உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும்,எந்தவொரு வெளிமாவட்ட மாணவரும் வீடு சென்று திரும்பி வர அனுமதிக்க மாட்டார்கள் என்றும் மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

No comments: