நுகர்வோர் சேவை அதிகாரிகளின் விசேட சுற்றிவளைப்பு

கொரோனா தொற்று காரணமாக சந்தையில்  மஞ்சள்துாளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் அதன் விலையும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் சந்தையில் விற்கப்படும் மஞ்சள்துாளுடன் கோதுமை மா கலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கமைய நுகர்வோர் சேவை அதிகாரிகள் அது தொடர்பில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

அந்த சுற்றிவளைப்பில் மஞ்சள்துாளைப் பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் ஒன்று கொழும்பு-புறக்கோட்டை பகுதியில் நுகர்வோர் சேவை அதிகாரிகளால் இன்று சுற்றிவளைக்கப்பட்டது.

சுற்றிவளைப்பின் போது 1000 கிலோகிராம் மஞ்சள்துாளும்,300 கிலோகிராம் கட்டி மஞ்சளும் மீட்கப்பட்டதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.  

No comments: