சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

கடந்த 17ம் திகதி கிழக்கு கடற்படைக்குழு திருகோணமலைக்கு வெளியே உள்ள ஃபவுல்துடுவ கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட வலைகள், 8 டிங்கி படகுகள்,மீன்படி சாதனங்கள் மற்றும்  557 கிலோகிராம் மீன் ஆகியவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு சந்தேக நபர்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

No comments: