கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் மீது பாரவூர்தி ஒன்று மோதியதில் ஒருவர் பலி

ஹக்மன-கோன்ஹல பகுதியில் நேற்றிரவு காவற்துறையினர் 6 பேர் கடமையில் ஈடுபட்டிருந்த போது பாரவூர்தி ஒன்று மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில்  காவற்துறை அதிகாரிகள் காயமடைந்த நிலையில்  சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்  காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

No comments: