கிரிபத்கொடை கொலை சம்பவம்- சந்தேக நபரகள் மூவர் கைது

கடந்த 16ம் திகதி கிரிபத்கொடை- நாஹேனவத்த பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத் தொடர்பில் களனி பகுதியில் மறைந்திருந்த  2 சந்தேக நபர்கள் களனி பிராந்திய குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும்  கொலையுடன் தொடர்புடைய பிரதான நபர் பன்னிப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன்,அதற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் ஆயுதங்கள் என்பன பேலியகொடை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: