கொரோனா அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்போம்- ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றும் சவாலில் வெற்றி பெறுவோம் என இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுக்குள்ளானவர்களோடு தொடர்பினைப் பேணியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறும்  இதன்போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: