இன்று நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் ஆரம்பம்

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவப் பெருவிழா தொடர்ந்தும் 25 நாட்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: