தபால் மூல வாக்களிப்பு

பொதுத் தேர்தலை முன்னிட்டு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தபால் மூல வாக்களிப்பில் இதுவரை தபால் மூல வாக்களிப்பை செலுத்த முடியாத அரச பணியாளர்கள் தமது காரியாலயம் அமைந்துள்ள மாவட்ட  தேர்தல் தெரிவத்தாட்சி காரியாலயத்தில் இன்றும் நாளையும் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரையும் நாளை காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 2.00 மணி வரையும் தபால் மூல வாக்குப்பதிவினை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

No comments: