தந்தையை கொச்சை தமிழில் விமர்சிப்பவர்கள் மக்களை எவ்வாறு அழைப்பார்கள் ? திகாம்பரம் கேள்வி


(சதீஸ்)

மலையகத்திற்கு புதிதாக உருவாகியுள்ள தலைவர் தமது சொந்த தந்தையை கொச்சை தமிழில் மக்கள் மத்தியில் விமர்சனம் செய்யும் போது மக்களை எவ்வாறு அழைப்பார் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான பழனிதிகாம்பரம் கேல்வி எழுப்பியுள்ளார்

19.07.2020.ஞாயிற்றுகிழமை மாலை பொகவந்தலாவலெச்சுமிதோட்டம் மேற்பிரிவு தோட்டப்பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பழனிதிகாம்பரம் மக்கள் அவதானமாகவும் சிந்தித்தும் செயற்படவேண்டும்

இது போன்ற வார்த்தைபிரயோகங்களை கூறும் தலைவர்கள் பலம் கிடைத்துவிட்டபிறகு மக்களையும் தாக்க முயற்சிக்க கூடும் எனவே மிக
அவதானமாக செயற்படவேண்டும் என்னை தினந்தோரும் கூறை கூறும் மாற்று கட்சிகார்கள் கூட எனது அமைச்சின் ஊடாக புனரமைக்கப்பட்ட கார்பட் 

வீதியின் ஊடாக சென்றுதான் தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்ளனர் பிரச்சாரம் செய்யுபோது கூட கூறு கிறார்கள் திகாம்பரம் இந்த மலையகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லையென கூறுகிறார்கள் நான் செய்த அபிவிருத்தி திட்டங்கள் மாற்று
கட்சி காரர்களுக்கு தெரியும் இருந்தாலும் மக்கள் மத்தியில் அவர்கள்
செய்ததாகவே பெயர் சூட்டி கொள்ளுவார்கள் 

டின்சின் தொடக்கம் சாஞ்சிமலைவரை கார்பட் வீதியிட்டது நான் அதேபோல் கடந்த அரசாங்கத்தில் ஹட்டனில் இருந்து நோர்வுட் வரை கார்பட் வீதியினை அமைத்தோம் தற்பொழுது நோர்வுட் நகரில் இருந்து கெம்பியன் வரையிலான வீதியின் கார்பட் ஈடும் 

பணி தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது அந்த வேலைத்திட்டத்தினை கூட எங்களது அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டது ஆனால் நாங்கல் இந்த வீதியினை புனரமைக்க நடவடிக்கை எடுத்ததாக மக்கள் மத்தியில் சென்று பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர் நான்

மக்களுக்கு பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டமையினால் மாற்று கட்சிகாரர்களுக்கு எதனை கூறி மக்களிடம் வாக்குகேட்பது என்பது தெரியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள் 

ஆகையால் தான் நான் ஒன்றும் செய்யவில்லை என
கூறி மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள் நுவரெலியா மாவட்டத்தில் எங்களுடைய வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது தைபிறந்தால் வழிபிறக்கும் என கூறினார்கள் ஆனால் இதன்றுவரை மக்களுக்கு எதுவும் பிறக்கவில்லை நான் அவ்வாறு எதுவுமே கூறவும்மில்லை சொன்னதை நிறைவேற்றியிருக்கிறேன் .

மக்களுக்கு எனது அமைச்சின் ஊடாக பாரிய அபிவிருத்தி திட்டங்களை
மேற்கொண்டிருக்கின்றேன் நான் விட்டுசென்ற அபிவிருத்தி திட்டங்களை மேலும் முன்னெடுத்து செல்ல மக்கள் எனக்கு அங்கிகாரம் வழங்ப்படவேண்டும் மலையக மக்களை தொடர்ந்தும் லயன்வீடுகளில் வைத்திருக்க வேண்டுமென என்னினார்கள் 

ஆனால் நாம் கிராமங்கள் அமைத்து எனது மக்களின் வாழ்க்கை தரத்தை
உயர்த்திருக்கின்றோம் புதிய அரசாங்கத்தில் அமைச்சி பதவி எடுத்து
ஆறுமாதங்களில் என்ன செய்தார்கள் அடிகல் நாட்டியதுமில்லை ஒரு வீடு
கட்டியதும்மில்லை நான் அமைத்து கொடுத்த வீடமைப்பு திட்டத்தில் கானப்பட்ட கூறைபாடுகளை கூட அவர்கலாள் பூர்திசெய்து கொடுக்கமுடியவில்லை 

இது போன்ற தலைவர்கல்தான் இன்னும் இருக்கிறார்கள் மேலும் மக்களின் வாழ்க்கைதரத்தினை
உயர்துவதற்கு மீன்டும் நான் அமைச்சராகி வந்தபிறகு என்னால் விட்டு சென்ற அபிவிருத்தியினை தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என தெரிவித்தார்

No comments: