அபிவிருத்தியுடன் கூடிய தொழில் பேட்டைகளே எனது இலக்கு –வினோகாந்த்


MEDIA Unit

கடந்த காலங்களில் அம்பாரை மாவட்டத்தில் காணப்படும் தமிழ் மக்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் வீதி புனரமைப்புகளையும் குறைவீடுகளை நிவர்த்திசெய்ததையுமே கண்டு கொண்டுள்ளனர்.

 உண்மையான அபிவிருத்தி பாதை என்ற போர்வையில் கடந்த கால அரசியல் வாதிகளால் எமது தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள.
என்று ஜக்கிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட இளம் ஆளுமை நிறைந்த வேட்பாளர் வெ.வினோகாந்த் குறிப்பிட்டார்.

பொத்துவில் பிரதேசத்தில் அண்மையில் இடம் பெற்ற தேர்தல் பரப்புரையின் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த வினோகாந்த்

கடந்த காலங்களில் எமது மக்கள் சரியான அபிவிருத்திப் பாதையில் செல்லவில்லை உரியமுறையில் எமது மக்களுக்கான சேவைகள் சென்றடையவில்லை மாறாக அரசியல் தலைமைகளாலும் ஏமாற்று அரிசியல்வாதிகளாலும் மக்கள் ஏமாற்றப்பட்டனர். இம்முறை அதை நிறைவேற நான் விடமாட்டேன் மக்களும் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என நன்கு உணர்ந்துள்ளனர்.

வெறும் வீதி அபிவிருத்திகளும் குறைவீடு நிவர்த்தியும் அபிவிருத்திக்கான தீர்வல்ல எமது தமிழ் சமூகத்திலும் நன்கு படித்த இளைஞர் யுவதிகள் இருக்கின்றனர் ஆனால் அவர்களது திறமைக்கான களம் இன்னும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை.

எனது குறிக்கோள் முழுமையடைந்த அபிவிருத்திப்பாதையுடனான தொழில் பேட்டையாக அமையவிருக்கின்றது இதுவே எனது கனவு எமது மக்கள் கடந்த காலங்களில் ஏமாற்று அரசியல் வாதிகளிடம் சிக்கி சின்னாபின்னமடைந்துள்ளனர் இதில் இருந்து விடைபெறும் காலம் தூரமில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக எனது அழைப்பினை ஏற்று அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகை தந்த தலைவர் சஜித் பிரறேமதாச அவர்களிடம்  என்னல் முன்மொழியப்பட்டு அவர் வழங்கிய உறுதி மொழியில் திகாமடுல்லையில் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் உள்ளதாக இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு உடனடியாக நீர்வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளார் நான் அவரளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரம் சிறக்க தொழிற்போட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்புக்களை வழங்குவேன் அதன் முதற்கட்டமான தம்பட்டடை ஆடை தொழிற்சாலை உருவாக்கம் பெறவுள்ளது தலைவர் சஜித் இதனை மீள்புனரமைப்பு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

கடந்கால இலக்கற்ற அரசியலை விடுத்து மக்கள் இலக்குடனான அரசியலில் பயணிக்க தயாரகியுள்ளனர் மக்கள் ஆணையுடன் நான் பாராளுமன்றம் செல்வது உறுதி என்றார்.

No comments: