தொழில் வாய்ப்பை இழந்துள்ள இலங்கைப் பணியாளர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் உட்பட  வெளிநாடுகளில் உள்ள  சுமார் 10,000 இலங்கையர்கள் தொழில்  வாய்ப்பை இழந்துள்ளதாக  வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்ப்பவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும், சுமார் 40,000 இலங்கைத் தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரன்தெனிய அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: