நாளை முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம்

கொரோனா தொற்றுக் காரணமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை முதல் மீள ஆரம்பிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் நாளைய தினம்  தரம் 11,12 மற்றும் 13ம் தர மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படுவதோடு அவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்  எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தவுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உபஅதிபர்கள் எதிர்வரும் 28ம் திகதி முதல் 31ம் திகதி வரை பாடசாலைகளுக்கு வருகைத் தர வேண்டும் என்பதோடு குறித்த நாட்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: