இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ள விசாரணைகள்புத்தளம்-வீரக்குளிசோலை வனப் பகுதியில் இடம்பெற்ற 10 கோடி ரூபாய் வரையிலான மர வியாபாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் 2017ம் ஆண்டு இவ்வாறு மோசடி வியாபாரம் மேற்கொள்ளப்பட்டதுடன் 1500 வரையிலான மரங்கள் வெட்டப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளதோடு, இது குறித்த வாக்கு மூலம் வழங்குவதற்கு வன பாதுகாப்பு அதிகாரி லால் அபேசேக்கர நேற்றைய தினம் முன்னிலையாகியுள்ளார்.

மேலும் இதில் திணைக்கள அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் குறித்த அதிகாரி ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: