கொரோனா தடுப்பூசியை தொற்றாளர்களுக்கு செலுத்த அனுமதி

ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியையும்,ஆஹமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனம் ஜைகோவ்-டி என்னும் தடுப்பூசியையும் கண்டுப்பிடித்துள்ளனர்.

இவ்வாறு இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட இரு கொரோனா தடுப்பூசிகளை தொற்றாளர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய கட்டுப்பாட்டுச் சபை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இரு தடுப்பூசிகளையும் மிருகங்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்த போது குறித்த தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: