நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் நேற்றைய தினம் 12 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுறுதியானவருடன்  தொடர்பைப் பேணிய 3 பேருக்கும்,சேனப்புர புனர்வாழ்வு மையத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 5 பேருக்கும்,கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும்  கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2782 ஆக பதிவாகியுள்ளது.

No comments: