கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு


நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இம்முறை கல்வி பொதுத்தராதர,உயர்தர மற்றும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றிற்கான திகதிகள் இன்று அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதமானால் உயர்தரம் மற்றும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளும் தாமதமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: