அஞ்சல் மூல வாக்களிப்பு- மூன்றாவது நாள்இன்று மூன்றாவது நாளாக அஞசல் மூல வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது.

அதன்படி அனைத்து பொலிஸ் நிலையங்கள்,பாதுகாப்புப் படை முகாம்கள், சிவில் பாதுகாப்பு நிலையங்கள், சுகாதார பிரிவு,அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்கள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களுக்காக இன்று அஞ்சல் மூல வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம்  அனைத்து பொலிஸ் நிலையங்கள்,பாதுகாப்புப் படை முகாம்கள், சிவில் பாதுகாப்பு நிலையங்கள், சுகாதார பிரிவு,அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலக ஊழியர்கள் தபால் மூல வாக்குப் பதிவில்  கலந்துக் கொள்ளவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இத்தினங்களில் தபால் மூல வாக்குப் பதிவு அளிக்க முடியாத அரச ஊழியர்களுக்காக மேலதிக 2 தினங்கள் ( எதிர்வரும் 20 மற்றும் 21 திகதிகள்)
பெற்றுக் கொடுக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments: