நுவரெலியா மாவட்டத்திற்கு ஜனாதிபதியின் விஜயம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம்  ஜனாதிபதி நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் செய்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்.

தலவாக்கலை நகரில் மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி உரையாற்றுகையில், நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை என்பவற்றிற்கு  தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு  அதிகாரிகளுக்கு ஆலாசனை வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் மாணவர்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பிலும் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: