முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

நேற்று இரவு 10 மணியளவில் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலாசோ பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி 75 அடி பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு பலத்த காயங்களுடன் முச்சக்கரவண்டியின் சாரதி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

No comments: